காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக ´ whatsapp’ என்ற மென்பொருள் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் ´ whatsapp’ மென்பொருளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்துள்ளனர்.இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தி பலன் அடைந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் ´ whatsapp’க்கு கூடி வரும் மவுசை கண்டு பலரும் வியந்து வரும் நிலையில், நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்த்த புதிய தூதுவனாக கருதப்படும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ´ whatsapp’ நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வாங்க முன்வந்துள்ளது.
இந்த தொகையில் 4 பில்லியன் டாலர்களை ரொக்கமாகவும், 12பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment