Monday, March 31, 2014

பெரம்பலூர், :  பெரம்பலூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி ஏப்ரல் 1 முதல் ஜுன் 30 வரை நடைபெற உள்ளதாக கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த நீச்சல் பயிற்சியானது, ஒவ்வொரு மாதத்தின் முதல் 15 நாட்கள், இரண்டாம் 15 நாட்கள் என்று பிரிக்கப்பட்டு 3 மாதங்களும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என்று ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 20 பேருக்கு சிறப்பு பயிற்சியாளரால் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் முறையான நீச்சல் தெரிந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியும், நீச்சல் தெரியாதவர்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படும். நீச்சல் பயிற்சி பெறுவதற்கு 15 நாட்களுக்கு ரூ.500 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். 
மாலை 3 மணி முதல் 4 மணி வரை பெண்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஆண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
நீச்சலை வெரும் விளையாட்டாக பார்க்காமல் அது ஒரு ஆரோக்கியத்திற்க்கான உடல் பயிற்சியாகவும், தற்காப்பு பயிற்சியாகவும் பார்த்தல் நலம். நமதூரில் நீச்சல் தெரியாதவர்களே இன்றைய தலைமுறையினரில் அதிகம்; அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு 
நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் பயன்கள்
·  நீச்சலின்போது நீர் உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.
· உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
· மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்கும். நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலையடைகிறது.
·  உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,  இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
· கை, கால், தொடைப் பகுதி தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.  மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும்.
· இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்புமுடிச்சுகள் பலம் பெறுகின்றன.
·  கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.
· செரிமான சக்தியைத் தூண்டும்.  அஜீரணக் கோளாறைப் போக்கும்.  நன்கு பசியைத் தூண்டச் செய்யும்.  மலச்சிக்கல் நீங்கும்.
·  ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்

0 comments:

Post a Comment