Monday, March 17, 2014

பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 27 வாக்குச்சாவடி மையங் களில் சிறப்பு பெயர் சேர்க்கை முகாம் நடை பெற்றது.
சிறப்பு முகாம்
நடைபெற உள்ள பாராளு மன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள 590 வாக்குச் சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் கடந்த 9-ந் தேதி அன்று நடைபெற்றது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தொடர்பான படிவங்களை பெற்று பூர்த்தி செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 590 வாக்குச்சாவடி மையங்களிலும் ¢, 3,832 ஆண் களும், 4,695 பெண்களும் என மொத்தம் 8,527 பேர் விண்ணப்பித்தனர்.
இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்
இதில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 வராத வாக்குச் சாவடிகளில் மீண்டும் ஒரு வாய்ப்பளித்து பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பங்கள் பெற வாக்குச்சாவ டிகளில் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளதன்படி பெரம் பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்குட் பட்ட 27 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம் பலூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட கவுண்டர் பாளையம், வி.களத் தூர்- வண்ணாரம்பூண்டி (2 மையங் கள்), மங்கலம் (2 மையங்கள்), பேரையூர், அயிலூர் ஆகிய பகுதி களி லுள்ள 7 வாக்குச் சாவடி மையங்களிலும், குன் னம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பொன்னகரம், வேப்பூர், புதுவேட்டக்குடி, மூங்கில் பாடி, புதுக்குறிச்சி, குரும்பா பாளையம், மேல மாத்தூர் (2 மையங்கள்), பிலி மிசை (2 மையங்கள்), அணைப் பாடி, கொளத்தூர், கூடலூர், மருங்கூர், பெரியாக்குறிச்சி, நமங்குணம், கட்டையன் குடிக்காடு, மருவத்தூர், பிலாக் குறிச்சி, குமிழியம் ஆகிய பகுதி களிலுள்ள 20 வாக்குச்சாவடி மையங்களிலும் ஆக மொத்தம் 27 வாக்குச்சாவடி மையங் களில் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை சிறப்பு பெயர் சேர்ப்புமுகாம் நடைபெற்றது. மேற்கண்ட முகாம்களை தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

0 comments:

Post a Comment