Monday, March 3, 2014

"தீவிரவாத குற்றச்சாட்டு : 8 வருடங்களுக்குப்பிறகு 3 மதரசா மாணவர்கள் விடுதலை!

3 பேருமே நிரபராதிகள்:கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு!!

போலீசின் சதி அம்பலம் !!!

தீவிரவாத குற்றம் சுமத்தி 8 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட 3 அப்பாவி முஸ்லிம்களை 'நிரபராதிகள்' எனக்கூறி கொல்கத்தா சிட்டி செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று முன்தினம் (27/02/14) விடுதலை செய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட அப்துல்லாஹ், தாரிக் அக்தர், நூருர் ரஹ்மான் ஆகிய மூன்று மாணவர்களின் சோகக் கதை :

கடந்த 2006 ஜனவரி 31ந்தேதி, வாரணாசியில் உள்ள 'ஜாமியா சலபியா' மதரசாவுக்கு வந்த போலீசார், மாணவர்களை, பாஸ்போர்ட் என்கொயரி என ஏமாற்றி அழைத்து சென்று, தீவிரவாத குற்றம் சுமத்தி பொய் வழக்கு புனைந்து சிறையிலடைத்தது அம்பலமாகியுள்ளது.

போலீசார் செய்த சதி குறித்து விடுதலை செய்யப்பட்ட பீகார் மாணவர் அப்துல்லாஹ், கூறியதாவது:

டெல்லியில் ஜாமியா சனாபீல் என்ற மதரசாவில் ஆரம்பக்கல்வியை முடித்த நான், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள 'ஜாமியா சலபியா'வில் மேல்படிப்பு பயின்று வந்தேன்.

சம்பவத்தன்று, பிரின்சிபால் அறைக்கு அழைக்கப்பட்ட நான் அங்கு 2 போலீசாரைப் பார்த்தேன், போலீசார் எனது பாஸ்போர்ட் என்கொயரிக்காக வந்துள்ளதாக தெரிவித்தனர்.

நான் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கவில்லையே என்றேன், உங்கள் வீட்டிலுள்ளோர் விண்ணப்பித்திருக்கலாம் அல்லவா, எனக்கூறி என்கொயரி முடித்து சில மணி நேரத்துக்குள் மதரசாவில் விட்டுப்போவதாக கூறி, காவலர்கள் என்னை அழைத்துச்சென்றனர்.

போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மேலும் சில உயரதிகாரிகள் இருந்தனர்.

ஷரம்ஜீவி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக் குற்றவாளி வலியுல்லாஹ் காசிமியுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது, என போலீசார் கூறினர்.

எனக்கு ஷரம்ஜீவி எக்ஸ்பிரஸ் என்றால், என்ன பொருள் என்பதும் தெரியாது, வலியுல்லாஹ் காசிமி என்ற பெயரையும் இப்போது தான் கேள்விப்படுகிறேன், என்றேன்.

ஒரு மணி நேரத்துக்குள் அங்கு வந்த கொல்கத்தா போலீசார், தீவிரவாதி ஒருவன் இவரது பெயரைக்கூறியுள்ளான், எனவே எங்களிடம் இவரை கொல்கத்தாவுக்கு அனுப்புங்கள் என்றனர்.

அப்போது அந்த ஹோட்டலுக்கு வந்த வாரணாசி மாவட்ட எஸ்.பி, ஆதாரம் இல்லாமல் இவரை உங்களுடன் எப்படி அனுப்புவது, எனக்கேள்வி எழுப்பினார்.

கொல்கத்தா போலீசாரோ, சாதாரண விசாரணைக்காக எங்களிடம் ஒப்படையுங்கள், இவருக்கு எதிரான குற்ற முகாந்திரம் இல்லையேல், இவரை தங்களிடமே ஒப்படைத்து விடுகிறோம், எனக்கூறி அழைத்துச் சென்றனர்.

கொல்கத்தா போலீசார், என்னிடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், நேராக சென்று கொல்கத்தா சிட்டி செஷன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், என்று சோகத்துடன் கூறுகிறார் அப்துல்லாஹ்.

வழக்கு விசாரணையின்போது, இதுபோன்ற தில்லுமுல்லுகளை கண்டுபிடித்த நீதியரசர், போலீசுக்கு கடும் 'டோஸ்' விட்டதுடன், 3 மாணவர்களையும் நிரபராதிகள் எனக் கூறி விடுதலை செய்தார்.


0 comments:

Post a Comment