Monday, March 3, 2014


மனிதனுக்கு உதவும் வகையிலான ரோபோட்டுகளை தயாரிப்பத்தில் ஒவ்வொரு நாடும் போட்டிப் போட்டுக் முன்னணி வகிக்கவே விரும்பும்.அது மருத்துவ துறைக்கு உதவுவதாகட்டும், தொழிற்சாலை துறை பணிகளாட்டும் செக்ஸ் உள்ள்ளிட்ட தனி நபர் தேவையாகட்டும் .எல்லாவற்றிற்கும் ரோபோட்டுகளை இவர்கள் தயாரித்து விடுவார்கள். இந்த வரிசையில் தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை..அதிலும் வயதான அப்பா, அம்மாவை கவனித்துக் கொள்ள முடியவில்லையே என மனக்கவலை அடைபவர்களை திருப்தி ஒரு நவீன ரோபோட் தயாராகி விட்டது.
இது நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும், எப்போதும் உங்கள் வீட்டில் இருந்த மாதிரியான சூழலுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையிலான நவீன ரோபோட் ஒன்றைதான் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளார்கள்.இந்த ரோபோட்டின்
பெயர் பீம்+ டெலிபிரசன்ஸ் மெஷின். ரோபோட்டின் கீழே உருளையாக சக்கரமும், மேலே சிறிய மானிட்டரும் அமைக்கப்பட்டிருக்கும். நம் கம்ப்யூட்டரில் வீடியோ சாட்டிங் செய்வது போல, இந்த ரோபோட் மூலமாக நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பேசிக் கொள்ளலாம். வீட்டில் எல்லா இடங்களுக்கும் செல்லும் வகையில் இந்த ரோபோட்டுக்கு நாமே கட்டுப்பாடுகளை விதிக்கலாம். வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுடன், நீங்களே வீட்டில் நேரடியாக இருந்து கவனித்து கொள்வதை போல கவனிக்கலாம். குழந்தைகளுக்கு தாலாட்டு பாடி படுக்க வைக்கலாம்.
அதே போல, முதியவர்களுடன் இந்த ரோபோட் மூலமாகவே நீங்கள் நேரடியாக பேசிக் கொள்ளலாம். இதுதவிர, பள்ளி, கல்லூரிகளிலும் இந்த ரோபோட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்கள் விளையாடும் போதும் ஏற்படும் அசம்பாவிதங்கள், அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்கலாம். மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருவது, கட்டளையிடுவது என 100 ஆசிரியர் செய்யும் வேலையை இந்த ஒரு ரோபோட்டே செய்து விடுமாம். விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலும் இருக்கிறதாம்

0 comments:

Post a Comment