Tuesday, March 4, 2014

 தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பரிந்துரையை அளிக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் கே. அருள்மொழி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் – செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது குறித்து ஆய்வு செய்து இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பரிந்துரையை விரைவாக அனுப்ப வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment