மகாராஷ்டிர மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், மத்திய உணவு மந்திரியுமான சரத் பவார் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று குழம்பிப் போய் பேசி வரும் மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்திய விடுதலை போராட்டத்தில் கங்கிரசின் பங்களிப்பு என்ன? அது செய்த தியாகங்கள் என்ன? என்பது பற்றி மோடிக்கு என்ன தெரியும்? காங்கிரசின் சித்தாந்தத்தால் தான் நாம் விடுதலை பெற்றோம் எனத் தெரிவித்தார்.
நாட்டுக்கு ஆபத்தானவர் மோடி என்று கூறிய சரத் பவார், ’2002-ல் குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மையினத்தை சேர்ந்த பிரதிநிதிகளும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அஹ்சன் ஜஃப்ரியும் குல்பர்கா சொசைட்டியில் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை நிகழ்ந்த இடம் குஜராத் தலைநகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. ஆனால், பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து மோடி ஆறுதல் கூற முன்வரவில்லை. அவர்களைப் பற்றி கவலைப்படவும் இல்லை’ என்று குற்றம் சாட்டினார்

0 comments:
Post a Comment