Friday, March 21, 2014


முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அகதிகளை தனதுதொகுதியில் வாக்களிக்க அனுமதிக்கமாட்டேன் என்று கலவர வழக்கில் கைதானபா.ஜ.கவின் கைரானா தொகுதி எம்.எல்.ஏ ஹுகும் சிங் தெரிவித்துள்ளார். தற்போது பா.ஜ.க சார்பாக கைரானா மக்களவை தொகுதிவேட்பாளராக ஹுகும் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகதிகளாக தற்போது முகாம்களில் தங்கியிருப்போருக்கு அவர்களுடைய பிறந்த ஊர்களில் வாக்குரிமை உள்ளது. தற்போது அவர்கள் சட்ட விரோதமாக அரசு நிலங்களில் தங்கியிருக்கின்றனர் என்று ஹுகும்சிங் கூறுகிறார். இதுதான் அவர்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு ஹுகும்சிங் கூறும் நியாயம். கைரானா தொகுதியில் சுமார் 7 ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர்.

அதேவேளையில் அரசியல் கட்சிகள் குற்றவாளிகளை வேட்பாளர்களாக போட்டியிட களமிறக்கியிருப்பதாக நீதிபதி ராஜேந்திர சச்சார் கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த ஹுகும்சிங், தனக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரிகை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஆனால், முஸஃபர் நகர் கலவரம் தீவிரமடைய ஹுகும்சிங் வகுப்புதுவேச மிக்க சொற்பொழிவை நிகழ்த்தியதாக கைதுச்செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment