Sunday, March 16, 2014



பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவத்திற்கு பின்னரும் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில உணவுகளால் குழந்தைகளுக்கு வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தினமும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அதிகம் உட்கொண்டால், அவை குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இங்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.


முள்ளங்கி
அதிகப்படியான வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் முள்ளங்கி. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முள்ளங்கியை சாப்பிட வேண்டாம்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் கூட வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். இருப்பினும் முட்டைக்கோஸ் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால், முட்டைக்கோஸ் சாப்பிட்டால், நான்கு மணிநேரத்திற்கு பின் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
காலிஃப்ளவர்
முள்ளங்கி மற்றும் முட்டைக்கோஸ் போன்றே காலிஃப்ளவரும் வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். எனவே இந்த காய்கறியையும் தவிர்ப்பது நல்லது.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி கூட முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே இதனை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த காய் கசப்பாக இருப்பதால், இதனை தாய்மார்கள் உட்கொள்ளும் போது, அது தாய்ப்பாலை கசப்பாக்கி, குழந்தைக்கும் வாய்வு தொல்லை ஏற்படுத்தும்.
குடைமிளகாய்
குடைமிளகாய் மற்றும் இதுப்போன்று காரமான உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.
பீன்ஸ்
எவ்வளவு தான் மார்கெட்டில் பீன்ஸ் அதிகம் விற்கப்பட்டாலும், எத்தனை நன்மைகள் நிறைந்திருந்தாலும், இதனை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தைக்கு உப்புசத்தை ஏற்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.
உருளைக்கிழங்கு
அனைவருக்குமே உருளைக்கிழங்கு வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப்பொருள் என்பது தெரியும். ஆனால் இத்தகைய உருளைக்கிழங்கை அளவாக தோலுடன் சாப்பிட்டால், வாய்வு தொல்லை சற்று குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் குழந்தைக்காக இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

0 comments:

Post a Comment