வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து ஆதரவு கேட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் நிஜாம் முகைதீன், நேற்று நேதாஜி நகரில் வீடுவீடாக சென்று ஆதரவு கோரினார். நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் வடசென்னை அவலத்தை எடுத்து கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் அக்கட்சியின் மாநில செயலாளர்கள் ரத்தினம், அமீர்ஹம்சா ஆகியோரும் வாக்கு சேகரித்தனர்.
இளைஞர்கள் லேப்டாப் படக்காட்சிகளுடன் பிரச்சாரம் மேற்க்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதேபோல் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடும் நெல்லை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தை அக்கட்சியின் தொண்டர்கள் மேற்க்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment