Monday, March 24, 2014

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மைக்ரோசாப்ட்டின் (Windows XP Operating System) விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வரும் சேவை வரும் ஏப்ரல் 8ம் தேதி உடன் நிறுத்தப்பட உள்ளது. 
இந்த நடவடிக்கையால் ATM சேவைகள் உட்பட, வங்கி சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2001ம் தேதி வெளியிடப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஏப்ரல் 8ம் தேதி உடன் அதனுடைய பயன்பாட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இயங்கு தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு தொழில்நுட்ப சேவைகளையும் மைக்ரோசாஃப்ட் வரும் 8ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள உள்ளது. 
ஏடிஎம் சேவைகள் உட்பட, கணினிகளிலும் தற்போது வரை விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது

0 comments:

Post a Comment