அமெரிக்காவில் நியூயார்க் நகரில், பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் சுவிர் மிர்சந்தானி என்ற 14 வயது இந்திய சிறுவன் படித்து வருகிறான்.
இந்த சிறுவன் அமெரிக்க அரசு, அரசு ஆவணங்களை அச்சிடுவதற்கு குறிப்பிட்ட ஒரு எழுத்துருவை (பான்ட்) பயன்படுத்தினால் மைக்கு ஆகும் செலவில் ஆண்டுக்கு 136 மில்லியன் டாலர் சேமிக்க முடியும் என்கிறான். அந்த எழுத்துருவை மாகாண அரசுகளும் பின்பற்றினால் அவை 234 மில்லியன் டாலர் சேமிக்க முடியுமாம். ஆக மொத்தம் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,480 கோடி) சேமிக்கலாம் என்கிறான்.தனது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், செலவினங்களை குறைத்து பணத்தை சேமிப்பதற்கான வழி குறித்து தான் சிந்தித்தபோது இந்த யோசனை வந்ததாக கூறுகிறான்.
மறுசுழற்சி செய்த காகிதங்களை பயன்படுத்தினால், அதன் மூலம் இயற்கை வளங்களை காப்பதோடு, பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்றும் இந்த சிறுவன் சொல்கிறான்.கேரமாண்ட், டைம்ஸ் நியூ ரோமன், செஞ்சுரி கோதிக், காமிக் சான்ஸ் என்று பல்வேறு எழுத்துருக்கள் இருந்தாலும் கூட, கேரமாண்ட் எழுத்துருவைப் பயன்படுத்துகிறபோது மை குறைவாக செலவாகும் என்கிறான் மிர்சந்தானி.
இந்த கேரமாண்ட் எழுத்துருவை தனது கல்வி மாவட்டத்தில் மட்டும் பயன்படுத்தினால் ஆண்டு செலவினத்தில் 24 சதவீத மையை குறைக்கலாம் என்கிறான். இதன் மதிப்பு 21 ஆயிரம் டாலர்.மிர்சந்தானியின் யோசனை அங்கு ‘ஜர்னல் பார் எமர்ஜிங் இன்வெஸ்டிகேடர்ஸ்’ என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது.அமெரிக்க அரசு தனது ஆவணங்களை அச்சிடுவதற்கு ஓராண்டுக்கு செலவிடும் தொகை, 1.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 160 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment