Tuesday, April 1, 2014

 
வி.களத்தூர் மில்லத் நகரைச்சார்ந்த லப்பைக்குடிக்காடு நூறுப்பிள்ளைவீடு சுல்தான் மொய்தீன் அவர்கள் நேற்று (31.03.2014) இரவு மக்காவில் வபாத்தானார். கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி நமதூரிலிருந்து சென்ற உம்ரா குருப்பில் அவருடைய மனைவி ராபியா பேகமும் சென்றிருந்தார். கணவர் மனைவி இருவரும் சேர்ந்து உம்ரா செய்ய நாடி சவுதியில் இருந்து நேரடியாக உம்ராவிற்கு சுல்தான் மொய்தீனும் சென்றிருந்தார். நேற்று இரவு ஏற்பட்ட உடல்நல குறைவால் ஹாஸ்பிடலில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். 
 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 comments:

Post a Comment