Wednesday, May 21, 2014

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவியர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சனிக்கிழமையே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
மதிப்பெண் சான்றிதழ்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
மதிப்பெண் சான்றிதழைப் பெற்ற மாணவர்கள், வேலை வாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். வேலை வாய்ப்புக்குப் பதிவு செய்வதற்காக, மாணவர்கள் தங்களது குடும்ப ரேஷன் அட்டை, பத்தாம் வகுப்பில் வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்த அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துவர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment