தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய மாநில உயர்நிலைக்குழு 17-5-2014 சனிக்கிழமை மாநில தலமையகத்தில் கூடியது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்களின் பிரச்சாரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜும்மா உரை
1-நம்முடைய ஜும்மா உரைகளில் எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசக்கூடாது.
2-மார்க்கம் சம்மந்தமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும்.
3-சில இயக்கங்களின் செயல்கள் மார்க்கத்துக்கு முரணாக இருந்தால்
அந்த இயக்கங்களின் பெயர்களைச் சொல்லாமல் அந்த செயல்களை ஆதாரங்களுடன்
விமர்சனம் செய்யலாம்.
அந்த இயக்கங்களின் பெயர்களைச் சொல்லாமல் அந்த செயல்களை ஆதாரங்களுடன்
விமர்சனம் செய்யலாம்.
4-எந்த தனி நபர் பற்றியும் ஜும்மாவில் பேசக் கூடாது.
பொது மேடைகள்
பொதுமேடைகளில் இயக்கத்தினரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தாலும் மாற்றுக் கர்டுத்துடையவர்களை விமர்சித்தாலும் நாகரீகமாகவும் பண்பாடுடனும் தான் விமர்சிக்க வேண்டும். ஏக வசனத்தில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.
தவறான கொள்கையில் உள்ள மக்கள் தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை வென்றெடுக்கும் வகையில் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பேஸ் புக்
தலமைமையின் சார்பில் நடத்தப்படும் பேஸ்புக் கில் கருத்து சொல்லும் நம் சகோதரர்கள் வரம்பு மீறி தரக்குறைவாக எழுதுகின்றனர். இதனால் ஜமாஅத்தின்
நன்மதிப்பு பாதிக்கின்றது. எனவே இனிமேல் நமது முக நூலில் நமது ஆக்கங்கள் மட்டும் தான் பதிவேற்றப்படும். வரவேற்றோ எதிர்த்தோ எழுதப்படும் எந்த
விமர்சனமும் அனுமதிக்கப்படாது.
நன்மதிப்பு பாதிக்கின்றது. எனவே இனிமேல் நமது முக நூலில் நமது ஆக்கங்கள் மட்டும் தான் பதிவேற்றப்படும். வரவேற்றோ எதிர்த்தோ எழுதப்படும் எந்த
விமர்சனமும் அனுமதிக்கப்படாது.
மேலும் மாவட்டம் கிளை சார்பில் நடத்தப்படும் முக நூல்களும் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். படித்து விட்டு சேர் செய்யும் வகையில்
தான் முகநூல்கள் இயங்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்தை பரப்புவதற்கு பயன்படக் கூடாது.
தான் முகநூல்கள் இயங்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்தை பரப்புவதற்கு பயன்படக் கூடாது.
தேர்தல் ஆதரவு
தேர்தலில் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுப்பது நன்மையை விட அதிகம் தீமையைத் தான் தருகிறது என்பதால் வரும் பொதுக்குழுவில் இந்த நிலைபாட்டை
மறுபரீசீலனைக்கு விடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறுபரீசீலனைக்கு விடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
மாநிலத் தலைமையகம்
0 comments:
Post a Comment