லண்டனை சேர்ந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் ஜாஸ்லாவ்ன் சர்வதேச அளவில் பிறக்கும் குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பிறந்த குழந்தைகள் இறப்பது கண்டறியப்பட்டது.
அதே வேளையில் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இந்த இறப்பு விகிதம் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் சீனா, காங்கோ போன்ற நாடுகளில் அதிகம் உள்ளன.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சத்து 79 ஆயிரம் பிறந்த குழந்தைகள் இறக்கின்றன. இது நைஜீரியாவில் 2 லட்சத்து 76 ஆயிரமும், பாகிஸ்தானில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆகவும், சீனாவில் 1 லட்சத்து 57 ஆயிரமாகவும், காங்கோவில் 1 லட்சத்து 18 ஆயிரமாகவும் உள்ளது.
உலகம் முழுவதும் பிறக்கும் 4½ கோடி குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே இறந்து விடுகின்றன.
அதே நேரத்தில் தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் அதிநவீன சிகிச்சைகள் மூலம் கருவிலேயே குழந்தைகள் அழிவது, பிறந்தவுடன் இறப்பது போன்ற நிகழ்வுகளும் தடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் குழந்தைகள் காப்பாற்ற படுகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment