பெரம்பலூர் மாவட் டத்தில் 92.33 சதவீத மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவுகள்பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 4ஆயிரத்து 909 மாணவர்களும், 4ஆயிரத்து 252 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 9ஆயிரத்து 161 பேர் எழுதினர்.
இவர்களில் மாணவர்கள் 4ஆயிரத்து 457 பேரும், மாணவிகள் 4ஆயிரத்து 1 பேரும் ஆக மொத்தம் 8ஆயிரத்து 458 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 92.33 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 90.38 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீத தர வரிசைப்பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 17-வது இடத்தை பெற்றது.
முதல் 3 இடங்கள்
பெரம்பலூர் ஸ்ரீராம கிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களைபெற்று சாதனை புரிந்துள்ளனர். மாநில அளவில் முறையே 2,-வது, 3-வது மற்றும் ,4-வது இடங்களையும், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை யும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகள் கே.அகல்யா, ஆர்.பார்க்கவி, ஏ.கோகிலா ஆகியோருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழு மத்தின் தலைவர் ம.சிவசுப்ரமணியன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன், பள்ளி முதல்வர் கோமதி, தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.அகல்யா 500-க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். அகல்யா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு.
தமிழ்-98 ஆங்கிலம்-97 கணிதம்-100 அறிவியல்-100 சமூக அறிவியல்-100
இதே பள்ளி மாணவி ஆர்.பார்க்கவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை யும், மாவட்ட அளவில் 2-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். பார்க்கவி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம்: தமிழ்- 097, ஆங்கிலம்- 100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.
மேலும் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி ஏ.கோகிலா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4-வது இடத்தையும் பெரம்பலூர் வருவாய் மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்- 98 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-100 சமூக -100, அறிவியல்-100
ரோவர் பள்ளி
பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆர். மணிகண்டன், டி.நவீன் இருவரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4-வது இடத்தையும், மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஆர்.மணிகண்டன் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம்: தமிழ்- 97 ஆங்கிலம்- 99 கணிதம்-100 அறிவியல்-100 சமூக அறிவியல்-100.
நவீன் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-98 ஆங்கிலம்-98 கணிதம்- 100 அறிவியல்-100 சமூக அறிவியல்-100.
மாநில அளவில் 4-வது இடமும், மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பெற்ற பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்.மணிகண் டன், டி.நவீன் ஆகிய இருவரையும் ரோவர் கல் விக்குழும துணைத்தலைவர் ஜான்அசோக்வரதராஜன் வாழ்த்தினார். அப்போது பள்ளி நிர்வாக அதிகாரி ஆண்டாள், பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரியை மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.
தனலட்சுமி சீனிவாசன் பள்ளி
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தமிழ்வழிக்கல்வி மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி கே.ரோஜா 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3-வது இடத்தையும், மாநில அளவில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
கே.ரோஜா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-98 ஆங்கிலம்-92 கணிதம்- 100 அறிவியல்-100 சமூக அறிவியல்-100.
சாதனை புரிந்த மாணவி கே.ரோஜாவிற்கும், இந்த சாதனைக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும், தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தலைவர் அ.சீனி வாசரெட்டியார், செயலாளர் பி.நீலராஜ், துணைத்தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது பள்ளி தலைமை ஆசிரியை சாந்திபன்னீர் செல்வம், உதவி தலைமை ஆசிரியை அன்பரசி ஆகியோர் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment