Saturday, May 24, 2014

இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே வருகைக்கு
எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு!!!
 
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வருகைதரவுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது.
2009 ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டதுடன், தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
இத்தைகைய இனப்படுகொலை செய்த இலங்கை அரசிடம் காங்கிரஸ் நட்பு பாராட்டி வந்ததை போன்று. பா.ஜ.க வும் தொடக்கத்தில் இருந்தே நட்பு பாராட்டி வருகிறது. மேலும் அந்த நட்பை வலுப்படுத்தும் விதமாகத்தான் தற்போது மத்தியில் அமையவுள்ள பா.ஜ.க அரசின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார் . இதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதை அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment