Wednesday, May 28, 2014


103513 
மல்லிபட்டினத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல் ! மர்மகும்பல் வெறிச்செயல்
இன்று (28/05/2014) இரவு 9.30 மணியளவில் மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் அங்கு கூடியிருந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்கள். அங்கு கூடிருந்த பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் கொலை வெறி தாக்குதல் நடத்த முடியாமல் திணறிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பியோடிய மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதில் தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சிக்கப்படும் என கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டதாக தெரிகிறது.
தாக்குதலில் அர்ஷாத் ( 21 ) , கையிலும் , அமீன் ( 25 ) கழுத்திலும் , மைதீன் ( 28 ) , நூருல் அமீன் ( 21 ) ஆகியோருக்கு கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிர்க்கு போராடிவரும் இவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மல்லிபட்டினம் ஜமாஅத் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிகின்றன. காவல்துறையால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10277449
10392430

0 comments:

Post a Comment