சவூதி அரேபிய சுகாதார அதிகாரிகள் சவூதி உணவகங்களுக்கு நாய் கால் மற்றும் இறைச்சி விநியோகித்து வந்த ஆசிய நாட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளனர். ஜித்தாநகரில் இயங்கி வந்த இக்கும்பல் நாய் இறைச்சியை குறிப்பாக நாய் காலை ஆட்டின் கால் என உணவகங்களுக்கு விநியோகித்து வந்துள்ளதாக அரபு நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.இக்கும்பல் விநியோகித்த நாய் இறைச்சி உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் என அனைவரும் செல்லும் உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அதிகாரிகளின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அதேவேளை குறித்த செய்தி வெளியான சில மணிநேரங்களில் ஜித்தா நகராட்சி அலுவலகம் கைப்பற்றப்பட்ட எலும்புகள் செம்மறி ஆட்டினுடயது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, பொது மக்கள் பலர் இது நாயின் எலும்புகள் என நம்புவதாகவும் மக்களை குழப்பத்தில் இருந்து திசை திருப்பவே ஜித்தா நகராட்சி அலுவலகம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என அரபு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த சந்தேக நபர்களுடன் ஏராளமான மிருக எலும்புகளும் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை குறித்த கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சவூதி அரேபியாவில் நாய் இறைச்சி விநியோகம்.
சவூதி அரேபிய சுகாதார அதிகாரிகள் சவூதி உணவகங்களுக்கு நாய் கால் மற்றும் இறைச்சி விநியோகித்து வந்த ஆசிய நாட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளனர். ஜித்தாநகரில் இயங்கி வந்த இக்கும்பல் நாய் இறைச்சியை குறிப்பாக நாய் காலை ஆட்டின் கால் என உணவகங்களுக்கு விநியோகித்து வந்துள்ளதாக அரபு நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.இக்கும்பல் விநியோகித்த நாய் இறைச்சி உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் என அனைவரும் செல்லும் உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அதிகாரிகளின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அதேவேளை குறித்த செய்தி வெளியான சில மணிநேரங்களில் ஜித்தா நகராட்சி அலுவலகம் கைப்பற்றப்பட்ட எலும்புகள் செம்மறி ஆட்டினுடயது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, பொது மக்கள் பலர் இது நாயின் எலும்புகள் என நம்புவதாகவும் மக்களை குழப்பத்தில் இருந்து திசை திருப்பவே ஜித்தா நகராட்சி அலுவலகம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என அரபு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த சந்தேக நபர்களுடன் ஏராளமான மிருக எலும்புகளும் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை குறித்த கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment