Monday, July 21, 2014

பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் உச்சகட்ட வெறியாட்டம் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரை வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தரைவழி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஒரே பகுதியை சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ் கூறுகையில், காஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெஜய்யாவில் பெருமளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் காஸா மீதான தங்களது தாக்குதல் மேலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment