Sunday, July 20, 2014

பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதலில் இதுவரை 300 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் என காயமடைந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களில் இருந்து தப்பித்து 47 ஆயிரம் பேர் ஐ.நா நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரும் முயற்சியில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மேற்காசிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

0 comments:

Post a Comment