கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எல் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கித் தவித்த 46 இந்திய நர்சுகளும் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தனர்.அவர்களில் பெரும்பாலானவர்கள், உயிரை பணயம் வைத்து மீண்டும் ஈராக்கிற்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 4 மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் சிரமத்தில் உள்ளதாக பெற்றோர்கள் கண்ணீருடன் பேட்டியளித்திருந்தனர்.
இந்நிலையில், துபாயில் உள்ள என்.எம்.சி. ஹெல்த்கேர் குரூப் நிறுவனத்தின் சி.இ.ஓ டாக்டர்.பி.ஆர்.ஷெட்டி 46 இந்திய நர்சுகளுக்கும் வேலை வழங்க தயாராக உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியிடமும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்திய தொழிலதிபரான டாக்டர்.பி.ஆர்.ஷெட்டி இந்தியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்.

0 comments:
Post a Comment