திங்கள்கிழமையுடன் முடிவிற்கு வந்த ஐக்கிய அரபு எமிரேட்சின் 13வது அரபு மொழியிலான பிரசங்க போட்டியில் 8 வயதான இப்ராஹீம் சபாந்த்ரி எனும் இந்திய சிறுவன் ”தேசத்தின் பிரசங்கி” என்கின்ற உயரிய விருதையும் கௌரவத்தையும் பெற்றுள்ளான்.
Department of Tourism and Commerce Marketing (DTCM) இன் அனுசரணையுடனும் Mohammad Bin Rashid Al Maktoum Foundation இன் தலைவருமான Shaikh Ahmad Bin Mohammad Bin Rashid Al Maktoum அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 12 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
இந்த சிறுவனின் அரபு மொழி உச்சரிப்பும் அவனது பிரசங்கமும் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்ததாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுவனின் தாய் மொழி கொங்கனி பிரிவை சேர்ந்த நவயாத்தி என்பதாகும், ஆனாலும் அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களை போன்ற அவனது பிரசங்கம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தது.
ஷார்ஜாவில் அமைந்துள்ள இப்னு கல்தூம் அரபு பாடசாலையில் தரம் 3ல் கல்வி பயிலும் இந்த சிறுவன் மிகவும் குறைந்த வயதில் இந்த உயரிய பட்டத்தை தனதாக்கி கொண்டவனாக திகழ்கிறான். இப்ராஹீமின் தந்தை கூறும்போது. இப்ராஹீம் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக விசேஷ பயிற்சிகள் எதனையும் பெறவில்லை அவன் ஒரு பொழுது போக்காகவே அரபு மொழியை பேச கற்றுக்கொண்டான் ஆனால் கடைசியில் அவன் வெற்றி பெற்றிருக்கிறான் என பெருமையுடன் தன் மகனை பற்றி நினைவு கூறுகிறார்.
”பெருநாள் தொழுகை” என்கின்ற தலைப்பில் அவன் ஆற்றிய பிரசங்கம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தாக ஐக்கிய அரபு எமிரேட்சின் நாளேடான கல்ப் நியூஸ் புகழாரம் சூட்டியுள்ளது.

0 comments:
Post a Comment