Tuesday, July 8, 2014

புகழ்பெற்ற மார்க்க அறிஞர் அப்துந் நாசிர் மதனி அவர்கள் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நாம் அறிந்ததே. 
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தமே இல்லாமல் இவர் கைது செய்யப்பட்ட நாள் 2010 ஆகஸ்ட் 17.
அது ரமளான் மாதம். மதனி அவர்கள் நோன்பாளியாக இருந்தார். அந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது சிறையில் அவருக்கு இது ஐந்தாவது ரமளான்.
மருத்துவர்கள் நோன்பு வைக்கவேண்டாம் என்று சொல்லியிருந்தும் நோன்பு வைக்காமல் என்னால் இருக்க முடியாது என்று நோன்பைக் கடைப்பிடிக்கிறார்.
ஏற்கனவே சர்க்கரை நோய், பார்வைக் குறைவு,செயற்கைக் கால் பொருத்தப்பட்ட இடத்தில் புண்கள் என்று பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தும்கூட உறுதிகுலையாமல் நோன்பைக் கடைப்பிடிக்கிறார்.
இவர் மீதான வழக்கை விரைந்து விசாரிக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருப்பது வேதனையிலும் வேதனை.
இன்னும் எத்தனை நாள் இருட்டுச் சிறை வாழ்க்கை என்று தெரியவில்லை.  இறைநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மதனி காத்திருக்கிறார்…!

0 comments:

Post a Comment