Wednesday, July 23, 2014

ரியாத்: முனிசிபால் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் அனுமதிக்கும் புதிய சட்டம் சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 சவுதி அரேபியா அமைச்சர்கள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சரும் இளவரசருமான சல்மான் தலைமையில் நடந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் முனிசிபால் கவுன்சில் தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து 2015ம் ஆண்டு நடக்கும் தேர்தல் முதல் பெண்களுக்கு வாக்களிக்கும், போட்டியிடும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் தெரிவித்திருந்தார்.

கவுன்சில்களில் 30க்கும் குறைவான உறுப்பினர்களே இருப்பார்கள்.ரியாத்: முனிசிபால் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் அனுமதிக்கும் புதிய சட்டம் சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியா அமைச்சர்கள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சரும் இளவரசருமான சல்மான் தலைமையில் நடந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் முனிசிபால் கவுன்சில் தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து 2015ம் ஆண்டு நடக்கும் தேர்தல் முதல் பெண்களுக்கு வாக்களிக்கும், போட்டியிடும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் தெரிவித்திருந்தார். கவுன்சில்களில் 30க்கும் குறைவான உறுப்பினர்களே இருப்பார்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தேர்வு செய்யப்படுபவர்கள், ஒரு பங்கு பேர் அமைச்சர்களால் பரிந்துரைக்கப்படிபவர்கள்.

பெண்களுக்கு சம உரிமை வழங்காமல் இருப்பதால் சவுதி அரேபியாவை பல நாடுகள் விமர்சித்துள்ள நேரத்தில் தான் இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

  அதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தேர்வு செய்யப்படுபவர்கள், ஒரு பங்கு பேர் அமைச்சர்களால் பரிந்துரைக்கப்படிபவர்கள்.  


பெண்களுக்கு சம உரிமை வழங்காமல் இருப்பதால் சவுதி அரேபியாவை பல நாடுகள் விமர்சித்துள்ள நேரத்தில் தான் இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment