இறைச்சியை கழுவும் போது அதில் இருந்து வெளியேறும் தண்ணீரின் வழியாக உங்கள் சிங்க், பாத்திரம், கைகள் என பல இடங்களுக்கு கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே, மிகவும் சுத்தமான இடத்தில், இறைச்சி கழுவிய தண்ணீர் வேறு எங்கும் பரவாமல் இருக்கும் வகையில், சுத்தப்படுத்தி, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கழுவுவது நல்லது. மேலும், கறியை வைத்த பாத்திரம் மற்றும் உங்கள் கைகளை மிகவும் சுத்தமாக கழுவ வேண்டியது அவசியமாகும் என்றெல்லாம் எச்சரிக்கை வெளியாகியிருந்த நிலையில் நாம் சாப்பிடும் இறைச்சியில் ஆபத்தான கிருமிகள் இருக்கின்றனவா? என்பதை அளவிடும் கருவி வந்துள்ளது.
கொரியா நாட்டின் சியோல் நகரில் செயல்படும் ‘பயோசென்சார்’ நிறுவனம் பெங்குயின் வடிவில் ஒரு எலெக்ட்ரானிக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. நாம் சாப்பிட இருக்கும் இறைச்சியின் ஒரு துளி சாற்றை கசக்கி எடுத்து கருவியில் உள்ள சிறு குப்பியில் வைத்தால் போதும், 2 நிமிடங்களில் அந்த இறைச்சியில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருக்கிறதா?, உணவு கழகம் அனுமதிக்கும் அளவை விட அதிகமாக தொற்றுக் கிருமிகள் உள்ளனவா? என்பதை காட்டிவிடும். இதனால் நாம் தீமை தரும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து நலம் பெறலாம்.
பொதுவாக, ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும். குளிர் பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பொதுவாக, ஆடுமாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லாகாகஸ் , எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இதனால்தான் இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது. மேலும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.
எனவே, கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவதுதான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி. கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத் தும். ரத்தக்குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும். நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். இது தவிர, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் ஏற்படலாம்.பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும்போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment