Tuesday, July 8, 2014

மதக்கட்டளைகளை பிறப் பிப்பதில் எந்த தவறும் கிடை யாது; எனினும் ஒருவர் மீது வலுக்கட்டாயமாக மதக் கட்டளையை தணிக்கக் கூடாது; இருதரப்பினருக்கு இடையே சமரசம் ஏற்படுத் தும் அதிகாரப்பூர்வமற்ற நீதி அமைப்பு முறைதான் ஷரீஅத் பஞ்சாயத் மன்றங் கள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கமளித் துள்ளார்.
உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய ஒரு தீர்ப்பை செய்தி யாக வெளியிட்ட ஊடகங்கள், “”"”ஷரீஅத் சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து இல்லை, மார்க்க அறி ஞர்களின் `ஃபத்வா’ அறிவிப்பு கள் செல்லாது”" என்றெல்லாம் தலைப்பிட்டு செய்திகளை வெளி யிட்டன. இது தொடர் பாக கருத்து தெரிவித்தவர் களும், முழு தீர்ப்பையும் தெரிந்து கொள்ளாமல் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
‘உச்சநீதிமன்றம் ஷரீஅத் சட்டத்தையே செல்லாததாக்கி விட்டதா?’ என்று முஸ்லிம் சமுதா யமும் விவாதிக்கத் தொடங்கி யுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைந்துள்ளது, இதில் சமுதாயத்தின் நிலைப் பாடு எப்படியிருக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கமளித்துள் ளார். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-
வழக்கறிஞர் விஸ்வ லோகன் மதன் என்பவர் 2005ஆம் ஆண்டில் தொடுத்த பொதுநல வழக்கிற்கான தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.கே. பிரசாத் மற்றும் பி.சி. கோஸ் அமர்வு 7-7-2014 திங்கள் கிழமை அன்று வழங்கியுள்ளனர்.
வழக்கறிஞர் மதன் தனது மனுவில், ஷரீஅத் நீதி மன்றங்கள் மூலம் காஜிகள் வழங்கும் தீர்ப்புகள் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளைப் பறிக்கின் றன எனவும், இந்த நீதி மன்றங்கள் இந்திய அரசி யல் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளவை என் றும், இத்தகைய நீதிமன்றங் களையும், அவைகள் மூல மாக வழங்கப்படும் தீர்ப்புக ளையும், ஃபத்வாகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடுத்திருந்தார்.
2005ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட இந்த பொது நல வழக்கின் தீர்ப்பு 2014 ஜூலை 7 திங்கள் கிழமையன்று சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கிறது. அதில், ஷரீஅத் கோர்ட்டுகள், தாருல் களா மற்றும் இது போன்ற முஸ்லிம் மதஞ் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசியல் சட்டரீதியாக அங் கீகாரம் இல்லை; ஆகவே, இத்தகைய நிறுவனங்கள் மூலம் தரப்படும் ஃபத்வா, முஸ்லிம் சட்ட வல்லுநர் தருகிற ஆலோசனையே (ஒபினியனே) தவிர, தீர்ப்பு (டிக்ரி) அல்ல; ஆகவே, இது நீதிமன்றத்தையோ, அரசையோ, தனி நபரை யோ கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டிருக்கிறது. அதோடு, இப்படி கூறுவ தால், தாருல் களா இருப்ப தையோ அது ஃபத்வா தரும் நடைமுறையையோ சட்ட விரோதமானது என்று அருத்தமல்ல என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியி ருக்கிறது.
தாருல் களா, தாருல் இஃப்தா போன்ற ஷரீஅத் நீதிமன்றங்களும், அவை போன்றுள்ள முஸ்லிம் சமு தாயத்தில் உள்ள அமைப்பு களும், பிரச்சனைகளுக் குள்ளானவர்கள் இடையில் சுமுகமாக தீர்த்து வைப்ப தற்குரியன ஒரு முறைசாரா நீதி வழக்கும் முறை (யn iகேடிசஅயட தரளவiஉந னநடiஎநசல ளலளவநஅ) என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. ஃபத்துவாக்களை தடைசெய்ய இயலாது
ஆகவே, இத்தகைய நீதி செலுத்தும் அமைப்புகளை யும் அவைகள் மூலம் தரப் படும் ஃபத்வா போன்ற தீர்வு களையும் தடை செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக் கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பிரசுரித்துள்ள தமிழ், ஆங் கில ஏடுகளும், ஊடகங் களும், முஸ்லிம் சமுதாயத் தில் நடைமுறையில் உள்ள ஷரீஅத் பஞ்சாயத்து, ஷரீஅத் கவுன்சில், ஷரீஅத் கோர்ட்டு, தாருல் களா, தாருல் இஃப்தா போன்ற வற்றை எல்லாம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தடை செய்து விட்டது போன்ற எண்ணத் தைத் தோற்றுவிக்கும் வகையில் செய்திகளை பரப்பியுள்ளன.
ஆனால், அது உண்மை யல்ல. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், திங்கள்கிழமை வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றிருக் கிறது.
இந்திய மக்கள் தொகை 120கோடி; அதில் 17 கோடியே 60 லட்சம் பேர் முஸ்லிம்களாக உள்ள மிகப் பெரிய சிறுபான்மை சமுதா யமாகும். முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டப்படி நடப்ப தற்கு இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கியி ருக்கிறது. 1937ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஷரீஅத் சட்டம், முஸ்லிம் கள், தங்களின் நிகாஹ், தலாக், ஜிஹார், லியான், குலா மற்றும் முபராத் என்னும் தலாக் வகைகள் பற்றிய பிரச்சனைகளில் முஸ்லிம் தனியார் சட்ட வெளிச்சத்தில் தான் தீர்வுகளை காண முடியும் என்று தெளிவாக கூறியி ருக்கிறது.
இதுபோன்ற விவகா ரங்களில் காஜிகள் தீர்வுகள் தருவதும், அவர்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்ட விளக்கமாக ஃபத்வா கொடுத்து உதவும் முப்தி களின் செயல்பாடுகளும் 1937ஆம் ஆண்டு ஷரீஅத் சட்டத் திற்கு உட்பட்டவை யாகவே உள்ளன. காஜிகள் தரும் தீர்வுகளும் முஃப்தி கள் தரும் ஃபத்வாகளும் சம்பந்தப் பட்டவர்களிடம் தெரிவிக்கப் படுகின்றன. அவற்றை சம்பந்தப் பட்டவர் கள் ஏற்பதும், ஏற்காததும் அவர்களின் உரிமை யாகும்.
ஷரீஅத் பஞ்சாயத்து அல்லது கோர்ட்டு அல்லது தாருல் களா கொடுக்கின்ற தீர்வுகளை ஏற்காதவர் களை கட்டாயப் படுத்தவோ, அவர்களை கட்டுப்படுத் தவோ எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் முயற்சிப்பது இல்லை. சுமுகமாகத் தீர்த் துக் கொள்ளாமல் அரசின் நீதிமன்றங்கள் மூலம்தான் தீர்த்துக் கொள்வோம் என்று செல்வோர் எவரை யும் எந்த முஸ்லிம் அமைப் பும் தடுப்பதும் இல்லை. ஆகவே, நாட்டில் உள்ள அரசின் நீதித்துறைக்கு இணையாக முஸ்லிம்கள் ஷரீஅத் நீதிமன்றங்களை நடத்து கிறார்கள் என்பது முற்றிலும் தவறான பொய்ப் பிரச்சாரம் ஆகும் என்பதை யும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் கடமைகள்
சுப்ரீம் கோர்ட் அளித் துள்ள தீர்ப்பும் அதன் தொடர்பாக எழுந்து பரப்பப் பட்டு வரும் ஆதரவு எதிர்ப் புகளும் முஸ்லிம் சமுதா யத்துக்கு சில தெளிவான வழி காட்டுதல்களை வெளிப்படுத்தியிருக்கிறது.
முதலாவதாக, முஸ்லிம் என்றால், தன்னை திருக் குர்ஆன், திருநபி (ஸல்) அவர்களின் போதனை களின் அடிப்படையிலான ஷரீஅத் சட்டப்படி நடப்ப வன் என்பதை நிலை நிறுத்த வேண்டும். இஸ்லா மிய சட்டப்படி நடக்கா தவன் தன்னை முஸ்லிம் என்று கூறுவதில் அருத்தம் எதுவு மில்லை.
இரண்டாவதாக, முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் கணவன் – மனைவி பிரச்சனை – வாரிசுப் பிரச்சனை – சொத்து, பாகப்பிரிவினை பிரச்சனை ஆகியவை சம்பந்தமாக தெளிவான விளக்கம் பெறுவதற்கு உகந்த சாதன மாகத் திகழ் வது ஷரீஅத் பஞ்சாயத்து அல்லது தாருல் களா போன்ற நிறுவனங்களே ஆகும். ஆகவே, ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் இத்தகைய நிறுவனங் களை செம்மையானதா கவும், சிறப்பானாக தாகவும் நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை முஸ்லிம் களுக்கு உள்ளது. இது இந்தியா முழுவதிலும் கவ னித்து செயல்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, இஸ்லா மிய ஷரீஅத்திற்குள் – அதன் வரம்புகளுக்குள் வராத பிரச்சனைகளில் இத்தகைய முஸ்லிம் நிறுவ னங்கள் தலையிடுவதை தடுத்துக் கொள்ள வேண் டும். வரம்பு மீறிய செயல் பாடுகளால் இஸ்லாமும், இஸ்லாமிய ஷரீஅத்தும் அவற்றை நடை முறைப் படுத்தும் நிறுவனங்களும் கடுமையான விமர்சனங்க ளுக்கு உள்ளாக்கப்படுகின் றன. நான்காவதாக, 1880 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ள காஜிகள் சட்டத்தில் திருத் தம் கொண்டு வர பெரு முயற்சி மேற்கொள்ளுதல் அவசிய மாகிறது. காஜிகள் பற்றிய சட்டம் இருக்கிறது – அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றிருப் பதை திருத்தி அவர்களுக் குள்ள அதி காரங்களை வரையறை செய்யும் வகையில் காஜி கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண் டும்.
ஐந்தாவதாக, ஷரீஅத் பஞ்சாயத்துக்கள், தாருல் களா, தாருல் இஃப்தா போன்ற நிறுவனங்கள் தரு கின்ற தீர்வுகளை அரசி னுடைய நீதிமன்றங்களும், அரசு அதிகாரிகளும் ஏற்று அங்கீகரிக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு பேராசிரியர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment