Tuesday, July 22, 2014

பெரம்பலூர்: பணி நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தூங்கியதாக மருத்துவர் மீது நோயாளி புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் முரளி (39).

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் மருத்துவர் கிரிஷ் தூங்குவதாகவும், 5 நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை பெற வந்தால் மட்டுமே அவரை எழுப்ப முடியும்.

அதுவரை காத்திருக்க வேண்டுமென தெரிவித்தனராம்.

அதைத் தொடர்ந்து, இரவு 2 மணி வரை காத்திருந்த முரளி மீண்டும் செவிலியர்களிடம் சென்று தாங்க முடியாத வயிற்றுவலி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, செவிலியர் ஒருவர் முரளிக்கு ஊசி போட்டு காத்திருக்கமாறும், மருத்துவர் தூங்கி எழுந்து வந்தபின் பார்த்துவிட்டு செல்லுமாறும் தெரிவித்தாராம்.



தொடந்து, அதிகாலை 3 மணி வரை காத்திருந்தும் மருத்துவர் கிரீஷ் வராததால், நோயாளி முரளி வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து நடவடிக்கை கோரி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவ அலுவலரிடம் முரளி திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

0 comments:

Post a Comment