வி.களத்தூர் ஐடியல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நேற்று (22.07.2014) ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் பள்ளியின் அரபி பாட ஆசிரியர் மௌலவி முஹம்மது ராசித் அவர்கள் ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார். மேலும் சதகாவின் சிறப்பை பற்றியும் தமது உரையில் பேசினார். பிறகு பள்ளியின் தாளாளர் அவர்கள் மௌலவி முஹம்மது
ராசித் அவர்கள் கூறியது போல் நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் முன்னால் பணியில் இருந்த ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று அனைத்து ஆசிரியர்களும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றி கூறினார்கள்.
இந்த இப்தார்விருந்துக்கு முஸ்லிம்கள் மட்டும் இல்லாமல் மாற்று மத ஆசிரியர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment