Saturday, August 2, 2014

அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமி பயன்படுத்தி வந்த Samsung Galaxy S4 திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளார்.அமெரிக்காவில் Dallas என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி சில மாதங்களாக Samsung Galaxy S4 என்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் (28/7/14) இரவில் தூங்குவதற்கு முன்னர் தனது தலையணைக்கு அடியில் போனை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். நள்ளிரவில் தனது படுக்கையறையில் ஏதோ தீ எரியும் வாசனையை உணர்ந்து எழுந்து பார்த்தபோது தான் தலைக்கு வைத்து படுத்திருந்த தலையணையில் நெருப்பு பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
பின்னர் அந்த சிறுமியின் வந்து சோதனை செய்தபோது, அவர் தலையணைக்கு அடியில் வைத்திருந்த ஸ்மார்ட்போனால்தான் தீ ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தார். நல்லவேளையாக தீப்பற்றிய உடனே விழிப்பு ஏற்பட்டு சிறுமி எழுந்துவிட்டதால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை
இதுகுறித்து சாம்சங் டீலர்கள் நடத்திய விசாரணையில் சம்மந்தப்போட்ட ஸ்மார்ட் போனில் ஒரிஜினல் பேட்டரி இல்லாமல் இருந்ததாகவும், விலைகுறைவான டூப்ளிகேட் பேட்டரி உபயோகித்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டது. எனவே எந்த வகை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அந்த மாடலுக்குரிய ஒரிஜினல் பேட்டரியை பொதுமக்கள் உபயோகிக்குமாறு சாம்சங் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment