Wednesday, August 13, 2014

நாளை ஆகஸ்ட் 15, அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15.08.2014 வெள்ளிக்கிழமை இந்திய சுதந்திர தின விழா சிறப்புற நடைபெற இருக்கிறது.
அபுதாபியில்  இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றதுடன் சிறப்புற நடைபெற இருக்கிறது. காலை 8 மணிக்கு தூதரக வளாகத்தில் இந்திய தேசியக் கொடியினை இந்திய தூதர் டி.பி. சீதாராம் ஏற்றி வைத்து, இந்திய குடியரசுத் தலைவரின் உரையினை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் தேச பக்திப் பாடல்கள் பாடுவர்.
துபாய் இந்திய துணைத் தூதரக வளாகத்தில் காலை 8.20 இந்திய தேசியக் கொடியினை கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் கொடியேற்றுகிறார்.
அஜ்மான் இந்திய சங்கத்தில் காலை 8 மணிக்கு இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும். ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷன், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா, அல் அய்ன், கல்பா உள்ளிட்ட அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழா வெகு சிறப்புற நடைபெற இருக்கிறது

0 comments:

Post a Comment