காலரா, வயிற்றுப்போக்கு, டையாரியா, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் தோன்றவும் பரவவும் காரண மாக இருக்கும் திறந்தவெளி மலம் கழித்தல் பழக்கத்தை உலகம் முழுவதும் இன்றும் மக்கள் பின்பற்றுகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் மரணமடைவதற்கு இப்பழக்கம் முக்கிய காரணியாகும். வருவாய் பேதங்கள் இதுபோன்ற பழக்கங்கள் தொடர்வதற்குக் காரணமாக இருக்கின்றன என்று ஐ.நா. தெரிவித்துள்ளதுடன் உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலால் முன்னேறினாலும், வசதிகள் வந்தாலும் இன்றும் 100 கோடி மக்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன் படுத்துகின்றனர், என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.சுகாதாரத்தைப் பேண வறுமை மிகுந்த நாடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணம் எல்லாமும் வீண். மனப்பாங்கு மாற வேண்டுமே தவிர, கட்டமைப்பைக் குறை சொல்லி பயனில்லை. பல இடங்களில் கழிப்பறைகள், தேவையற்றப் பொருட்களை வைத்திருக்கும் கிடங்குகளாகத்தான் பயன் படுகின்றன என ஐ.நா. புள்ளியியலாளர் ரோல்ப் லூயென்டிக் தெரிவித்திருந்தார்.இதனிடையே திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதாரக் கேடான காரியம் மட்டுமல்ல, இன்றைய சூழலில் பாதுகாப்பாற்ற ஒன்றாகவும் விளங்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், உத்திரப்பிரதேசத்தில் இரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில் பேசிய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சர் உபேந்திரா, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை சுட்டிக் காட்டினார்.அந்த அறிக்கையில் உலகளவில் திறந்தவெளி மலம் கழிப்பவர்களில் 60% பேர் இந்தியாவில் வசிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு நிர்மல் பாரத் அபியான் திட்டத்தை மாநில அரசுகள் மூலமாக துரிதப் படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேபோல் திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை ஒழித்துக் கட்ட, குறிப்பாக கிராமங்களில் கழிவறைகள் கட்டுவதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உண்டாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கமே சுகாதாரமான கழிவறைகளை நாடு முழுவதும் உண்டாக்குவது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment