இந்தியாவில் முன் எப்போதும் இல்லாதவகையில் குழந்தைகள் மரணமும் நீரிழிவுநோய், புற்றுநோய், இதயநோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?
சமீபத்தில்அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்மையம்(Centre for Science and Environment)வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும்மிக, மிகஅதிர்ச்சிரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது (Junk foods) துரிதவகை உணவுகளைத்தான். தொடர்ந்துநாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரிதவகை உணவுகளை(Junk foods)தடை செய்து குழந்தைகளை காப்பாற்றவேண்டும் என்று அந்தமையம் மத்தியஅரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2013-ம்ஆண்டு செப்டம்பரில் துரிதஉணவுகளை உண்பதால்ஏற்படும் பாதிப்புகளை ஆய்வுசெய்யகுழு அமைக்கநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்துஅறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்மையத்தின் சுனிதாநரேன் மற்றும் சந்திரபூஷன் ஆகியோர் தலைமையிலானகுழு இதுதொடர்பான விரிவான ஆய்வுகளைமேற்கொண்டது. அந்த ஆய்வில் இருந்து…
துரிதஉணவு(Junk foods)என்றால்என்ன?
புரதம், வைட்டமின், கனிமச்சத்துக்கள்மிகக் குறைந்த அளவுஅல்லது இல்லவேஇல்லாத – மிகுந்தஉப்பும், கொழுப்பும் கொண்டஉணவுகள் துரிதஉணவுகள்(Junk foods)என்று வரையறுத்துள்ளது தேசியசத்துணவுகழகம் (National Institute of Nutrition).
இந்தியாவில் அதிகரிக்கும் இறப்புசதவீதம்
துரிதஉணவுகளை உண்பதால் நீரிழிவு, உயர்ரத்தஅழுத்தம்மற்றும் இதயநோய்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் 1990-ம்ஆண்டில்மேற்கண்டநோய்களால்ஏற்படும்இறப்பு 29 சதவீதமாகஇருந்தது.இது 2008-ம்ஆண்டு 53 சதவீதமாகஉயர்ந்தது.2020-ம்ஆண்டுஇது 57 சதவீதமாகஉயரும்.
மேலும்இந்தியாவில்இதயநோய்களால்ஆண்டுக்கு 35 சதவீதம்பேர் (35 – 64 வயதுக்குட்பட்டோர்) இறக்கின்றனர். தவிர, வளர்இளம்குழந்தைகளின்மரணம், சிறுவயதிலேயேபூப்பெய்தல், தலைபெருத்தல், உடல் எடை அபரிதமாக அதிகரித்தல், மூளைவளர்ச்சிகோளாறுகள் ஆகியவைகடந்த 3 ஆண்டுகளில் 28 சதவீதம்அதிகரித்துள்ளதாகஎச்சரித்துள்ளதுஉலகசுகாதாரஅமைப்பு.
உலகளாவியநீரிழிவுநோய்கழகம் (International Diabetes Federation) விடுத்துள்ள அறிக்கையில்தற்போது 40.9 மில்லியனாகஇருக்கும்இந்தியநீரிழிவுநோயாளிகள்எண்ணிக்கைவரும் 2025-ம்ஆண்டு 69.9 மில்லியனாகஉயரும்என்றுகுறிப்பிட்டுள்ளது.
கடந்த 2013-ல்உலகளாவியமருத்துவஆய்வுஇதழான Epidemiology சென்னையில்இருக்கும் 400 பள்ளிகளில் குழந்தைகளிடம்ஓர்ஆய்வைமேற்கொண்டது. இதில் 21.5 சதவீதம்பேருக்கு, குறிப்பாக பெரும்பாலும் உடல் எடை அதிகம்கொண்ட குழந்தைகளுக்கு உயர்ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.
உலகளாவிய அளவில் உணவுக்காகபயன்படுத்தும் உப்பின்அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே50சதவீதம் உயர்ரத்தஅழுத்தமும்,22சதவீதம்பக்கவாதமும்,16சதவீதம்இதயநோய்களும்குறையும்என்கிறதுஉலகஇதயக்கழகம் (World Heart Federation). ஆனால், துரித உணவுகளில் உப்பும் இனிப்பும் 50 சதவீதம்கூடுதலாக இருக்கின்றன.கூடவே, சாயமும், ரசாயனமும்.
அப்பாவிகளின்தேசமாஇந்தியா?துரிதவகை உணவு Junk foods) விற்பனையில் உலகிலேயே அதிகஅளவு கோலோச்சியது அமெரிக்காதான்.அங்குகடந்த 2010-ம்ஆண்டு இயற்றப்பட்டசுகாதாரம் மற்றும் பசிக்கொடுமையிலிருந்துவிடுபட்ட குழந்தைகளுக்கான சட்டம் கடந்த ஜூலைமாதம் நடைமுறைக்குவந்துள்ளது. போதாக்குறைக்குமிச்சேல்ஒபாமாதுரிதஉணவுகளுக்கு எதிராக தீவிரபிரச்சாரம்செய்கிறார். இதனால் அங்குதுரிதவகைஉணவு(Junk foods)வியாபாரம்மொத்தமாகபடுத்துவிட்டது.இவைதவிர, சமீபத்தியஆண்டுகளில்சுமார் 20-க்கும்மேற்பட்டநாடுகள்பல்வேறுவகைகளில்துரிதவகைஉணவுகளைதடைசெய்துள்ளன.
அப்புறம்என்ன?
இருக்கவேஇருக்கிறதுஇந்தியா.அப்பாவிகளின்தேசம்.அணுவில்ஆரம்பித்துஅத்தனைகழிவுகளையும்இங்குவந்துகொட்டலாம்.201516ம்ஆண்டுகளில்இந்தியாவில்துரிதவகைஉணவுத்தொழில்தற்போதுஇருப்பதைவிடஒன்றரைமடங்கு வளர்ச்சிஅடையும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைக்கும்விதிமுறைகள்
இந்தநிலையில்கடுமையானவிதிமுறைகளைவகுத்துஅதனைசட்டமாக்கவேண்டும்என்றுஎச்சரிக்கைமணிஅடித்துள்ளதுஅறிவியல்மற்றும்சுற்றுச்சூழல்மையம்.அதன்பரிந்துரைகள்:
* கல்விநிறுவனங்கள்மற்றும்அதன் 500 மீட்டர்தொலைவுக்குள்துரிதவகைஉணவுவிற்பனைசெய்யக்கூடாது.
*தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில்வாரநாட்களில்மாலை 4 மணிமுதல்இரவு 10 மணிவரையும், வாரஇறுதிமற்றும்விடு முறைநாட்களில்காலை 8 மணிமுதல்இரவு 10 வரையும் துரிதஉணவுவகை(Junk foods)விளம்பரங்களைதடைசெய்யவேண்டும்.
* மேற்கண்டவிளம்பரங்களில் பிரபலங்கள்நடிக்கவும், துரிதஉணவுவகை (Junk foods) விற்பனையை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் விழாக்களில்கலந்துகொள்ளவும் தடைவிதிக்கவேண்டும்.
* துரிதவகைஉணவின்கெடுதல்குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்து பள்ளிகளில் பாடம் வைக்கவேண்டும்.
* துரிதவகைஉணவுகளுடன்இலவசமாகபொம்மை, கார்ட்டூன் படங்கள் போன்ற சிறுவர்விளையாட்டு சாதனங்கள் அளிப்பது தடை செய்யப்படவேண்டும்.
* மேற்கண்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்த புதியசட்டம்இயற்றவேண்டும்.
தடைசெய்தஉலகநாடுகள்!
கனடா, காஸ்டாரிக்கா, லாட்வியா, லூதியானா, மெக்ஸிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,ஐக்கியஅரபுநாடுகள்,அமெரிக்கா ஆகிய நாடுகள்துரித வகை உணவுகளைபள்ளிகளில்விற்பனை செய்யதடைவிதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், லூதியானா, நியூசிலாந்து, நார்வே, பெரு, போலந்து, ரோமானியா, தென்கொரியா, ஸ்வீடன், தாய்வான், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே ஆகியநாடுகளில் துரிதவகைஉணவு விளம்பரங்களுக்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, மெக்ஸிகோ, பெரு, அமெரிக்கா ஆகியநாடுகளில் துரிதவகை உணவுக்கு கூடுதல்வரி விதிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment