பன்றி காய்ச்சல் உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் உலகை உலுக்க வந்திருக்கிறது. அதுதான் எபோலா எனும் உயிர்கொல்லி வைரஸ்.1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, ‘எபோலா வைரஸ்’ என, பெயர் வந்தது.
“காற்றின் மூலம் பரவாது”
எபோலா என்பது மனிதனின் இரத்த அணுக்களை தாக்கும் ஒருவித கொடிய வைரஸ் கிருமி. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது எனினும் வியர்வை, எச்சில், இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் அனைத்தின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும்.
“எபோலாவை குணப்படுத்த முடியாது”
எபோலா வைரஸ் தாக்கப்பட்ட நபரை வெகு விரைவாக பலமியக்க செய்யும். இந்த வைரஸ் கிருமியை குணப்படுத்த முடியாது.
நோயின் அறிகுறிகள்: எபோலா வைரஸ் தாக்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களில் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாயிற்று வலி, வாந்தி மற்றும் சில சமயங்களில் இரத்தப் போக்கும் ஏற்படும்.
தற்காத்துக் கொள்வது எப்படி?
> கைகளை அவ்வப்போது சோப்பை கொண்டு நன்றாக கழுவவும்.
> வெளிப்புற உணவுகளை தவிருங்கள். வீட்டிலேயே சுகாதாரமாக தயார் செய்து உண்ணுங்கள்.
> வீட்டை சுத்தமாகவும், சூரிய வெளிச்சம் அனுமதிக்குமாறும் காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
தாக்கினால் என்ன செய்வது?
உடனடியாக தலைமை மருத்துவமனையை நாடுங்கள்.மேலும் எபோலா வைரஸ் குறித்த சந்தேகங்கள், புகார்களுக்கு இலவசத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. . இந்தக் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 044-2345 0496, 2433 4811. அல்லது தமிழக அரசின் 104 மருத்துவ உதவி சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:
Post a Comment