Tuesday, August 12, 2014

புனித உம்ரா வருபவர்களிடம் பணம், கையடக்கத் தொலைபேசி போன்றவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கும்பலொன்றை மக்கா போலீசார் கைது செய்துள்ளனர். மியன்மார் நாட்டைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நான்காம் நபராக சவுதி அரேபியாவைச் சேர்ந்த, இவர்களுக்கு தலைவராகச் செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் 25 – 39 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களாகும்.

இவர்கள் பாதுகாப்பு போலீசார் போன்று உடையணிந்து, அங்கு வரும் இந்திய உம்ராக் குழுக்களில் உள்ள வாயோதிபர்களிடம் கொள்ளையடித்துள்ளனர். தொடர்ச்சியாக மக்கா போலீசாருக்கு வந்த முறைப்பாடுகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட போது இவர்களிடம் எட்டாயிரம் ரியாலுக்கும் மேற்பட்ட பணத்தொகை(சுமார் இரண்டரை இலட்சம் இலங்கை ரூபாய்கள்), கையடக்கத் தொலைபேசிகள், பேர்ஸ்கள் போன்றவற்றுடன் மேலும் சில திருடப்பட்ட பொருட்களும் காணப்பட்டன.

0 comments:

Post a Comment