எபோலா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் விசா வழங்குவதை சவூதி அரேபியா நிறுத்தியுள்ளது.
எபோலா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா விசா வழங்குவதை சவூதி அரேபியா நிறுத்தியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவூதியில் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கி வியாழக்கிழமை உயிரிழந்ததையடுத்தே அவரது குடும்பத்தினர் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜித்தாவிலுள்ள ஒருவருக்கு எபோலா வைரஸ் தாக்கியுள்ளதென்ற தகவலை சவூதி சுகாதாரத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் எபோலா வைரஸ் பரவியதையடுத்து எபோலா லைபீரியா- நைஜீரியா- கினியா மற்றும் சியர்ரா லியோனுக்கும் பரவியது.
இந்த நாடுகளில் கடந்த 4 ஆம் திகதி வரை மட்டும் 932 பேர் உயிரிழந்துள்ளனர். லைபீரியாவில் பணிபுரிந்த இரண்டு அமெரிக்க வைத்தியர்கள் எபோலா வைரஸ் தாக்கியது.
இதையடுத்து நாடு திரும்பிய அவர்கள் அட்லாண்டாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
0 comments:
Post a Comment