கூகுள் தேடல் மூலமாக சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்துள்ளார் அசாம் பெண் ஒருவர். நிஜவாழ்க்கையிலிருந்து தான் பெரும்பாலான சினிமாவிற்கான கதைக்கருக்கள் கிடைக்கின்றன. ஆனால், சில சமயங்களில் நிஜ வாழ்க்கையில்…நடப்பவை சினிமாவையும் மிஞ்சி விடுவதுண்டு. அப்படித் தான் அசாமில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் பீகார், பரவ்னி ரயில் நிலையத்தில் ஆறு வயது குழந்தையாக இருந்த போது எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தைப் பிரிந்தார்.
கடந்த 1997ம் ஆண்டு தனது மாமாவுடன் குடியா என்ற சிறுமி தனது பாட்டியைக் காண ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரவ்னி ரயில் நிலையத்தில் சில பொருட்கள் வாங்குவதற்காக இறங்கிய குடியாவின் மாமாவால் மீண்டும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை.
மாமாவைக் காணாமல் அழுத குடியாவை ரயில்வே போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். தனது பெற்றோரைப் பற்றி குடியாவால் தெளிவான தகவல்களைக் கூறாததால் அவரது பெற்றோரைப் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
பாட்னா ரயில்வே கிராஸிங்கிற்கு அருகே உள்ள பிஸ்கட் கம்பெனியில் அவரது மாமா வேலை பார்ப்பதாகவும், அதற்கு அருகிலேயே அவரது இல்லம் இருந்ததாகவும் மட்டும் குடியா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அசாம் அதிகாரி ஒருவர் வசம் சேர்ந்தார் குடியா. பின்னர் அங்கேயே வளர்ந்துள்ளார். குடியாவின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதில்
நீலக்சி சர்மா என்ற அந்த அதிகாரி தீவிர முயற்சி எடுத்து வந்துள்ளார். எவ்வளவோ முறை நேரில் சென்றும் இந்த 17 ஆண்டுகளில் குடியாவின் வீட்டை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகுளில்
இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார் நீலக்சி. அப்போது அந்த பிஸ்கட் கம்பெனியின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அதன் மூலம், குடியாவின் மாமாவைக் கண்டுபிடித்தார் நீலக்சி. பின்னர் அவர் மூலமாக குடியாவை
அவரது குடும்பத்துடன் இணைத்து விட்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளை மீண்டும் பார்த்த அவளது பெற்றோர், குடியாவை வாரி அணைத்துக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நீலக்சி.

0 comments:
Post a Comment