Saturday, August 9, 2014


உலகில் உள்ள முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி சர்வதேச விமான நிலையமும் செயல்பட்டு வருகிறது

ஆச்சரியத்தில் ஆழ்த்திய பள்ளிவாசல்! 

பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த விமான விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்றுவருகின்றனர்…இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

இங்கு அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை நிறுவியுள்ளனர்… 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அறையில் சுமார் 10 பேர் வரை ஒரே நேரத்தில் தொழக்கூடிய அளவிற்கு வசதி கொண்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது …ஒழு செய்வதற்கு தொழுகை அறையின் உள்ளே குளியல் அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது….
 இப்பள்ளிக்கு இமாம் மற்றும் மோதினார் கிடையாது அவரவர் தொழுகையை நிறைவேற்றி செல்லும் நிலை.. ஆனால் இந்த வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை..
இது பற்றி அங்கு பணி புரியும் சகோதரர் தெரிவித்தது…
இந்த தொழுகை அறையை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய அதிகாரிகளின் முயற்ச்சியால் கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி தொழுகை நடத்தி வருகின்றனர்…
ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே நம் தொழுகை இறைவனிடம் ஏற்புடையதாக அமையும் வகையில் நாம் தொழுவோம் அதற்காக நிறைய இடங்கள் இந்த விமான நிலையத்தில் உள்ளது அந்த இடத்தில் நாம் தொழ முயற்ச்சி செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
இதைப்போல் அனைத்து விமான நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகள்,பள்ளி,கல்லூரிகளில் தொழுகை நடைப்பெற முடியாத சூழல் நிலவும் பகுதிகளில் முறச்சி எடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்து 5 வேலை தொழுகை நடைப்பெறுவதற்கு முயற்ச்சி

 தினசரி  திருச்சிக்கும் துபைக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதியம் 2:45 மணிக்கு உள்ளது.இதில் பயணம் செய்பவர்கள் மதியம் 12 மணிக்கு விமான நிலையத்திற்கு வர வேண்டும். 
பின் செக்கிங் முடிய ஒரு மணி நேரம் ஆகும்.
பின் விமானத்திற்கு 1முதல் 2 மணி நேரம் காத்திருக்க் வேண்டும்.
முஸ்லீம் மக்களுக்கு 1 மணிக்கு லுஹர் தொழுகை தொழ வேண்டும்.
இனி இந்த தொல்லை இல்லை.பொறுமையாக லுகர் தொழுகலாம்.





0 comments:

Post a Comment