Tuesday, August 12, 2014

பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைகளை இணையம் மூலமாகவும் புகாராக அளிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் தங்களுக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைகளைத் தீர்க்க காவல் நிலையத்தை அணுக வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஆனால், அனைவராலும் காவல் நிலையத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி தமிழக காவல் துறை சார்பில் ட்ற்ற்ல்:ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தளம் மூலம் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை வீட்டிலிருந்தபடியே தெரிவிக்கும்பட்சத்தில், குறைகளுக்கு உடனடி தீர்வு காண வழிசெய்ய முடியும். எனவே, பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் மேற்கண்ட இணையத்தை பயன்படுத்திப் பயன் பெறலாம்.

0 comments:

Post a Comment