காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒரு இனப்படுகொலை என ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் ஆதிக்கத்தில் உள்ள காஸா முனை மீது இஸ்ரேல் ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் மீது காஸாவும் பதில் தாக்குதல் மேற்கொண்டது.
சுமார் 50 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மேலும் இஸ்ரேல் தரப்பில் 73 பேர் பலியாகினர் ஆனால் இதில் ஐம்பதிற்கும் அதிகமானோர் இஸ்ரேல் ராணுவத்தினர் ஆவர். தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நேற்று பேசினார். அப்போது அவர் காஸா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது கடும் கண்டனம் தெரிவித்தார்.
கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசியதாவது:–
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இதற்கு முன் ஏற்படுத்தியதை விட அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த போரைவிட தற்போது போர்க்குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. போரின்போது நடந்த நிகழ்வுகளை உலகம் முழுவதும் அனைத்து கண்கள் பார்த்தன. காதுகள் கேட்டன. கடந்த 1967–ம் ஆண்டில் பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை போர் மூலம் இஸ்ரேல் கைப்பற்றியது. ‘‘தற்போது பாலஸ்தீனத்தின் காஸா மீது நடந்த போர் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையாகும்’’ என்றார்.

திருப்பி அடியுங்கள்..,தீவிரவாதிகளஎன்றுதானே நாய்கள் சொல்லும்,.. சுயமரியாதைக்கு இதுதான் பட்டமென்றால் அது பெருமைதான்.உங்கள் தாய்நாட்டிற்காக போராடுங்கள்.சத்தியம் தோற்க்காது.
ReplyDelete