Tuesday, September 30, 2014

இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் கடுமையான நிலைப்பாடு கொண்டிருந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கு சிறைக்குப் போயிருப்பதை இலங்கை அரசு ஊடகங்கள் முதன்மைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன.ஈழத் தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை அவர் நிறைவேற்றினார்.

இலங்கை வீரர்கள் தமிழகம் வருவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. தமிழக வீரர்கள் இலங்கை செல்லவும் அனுமதி அளிக்கவில்லை. இப்படி சிம்ம சொப்பனமாக இருந்த ஜெயலலிதா, சிறைக்குப் போனதால் மிக முக்கியத்துவம் கொடுத்து இலங்கை அரசு ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசால் நடத்தப்படும் தினகரன் நாளேட்டில் ஜெயலலிதா வழக்கு, தமிழக வன்முறைகள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமோ, ஜெயலலிதாவை பற்றி செய்தி வெளியிடுகையில், “இந்தியாவின் சர்ச்சைக்குரிய” அரசியல்வாதி என்று சுட்டிக்காட்டி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சகோதரி என்று கூறிக் கொண்டு ஜெயலலிதாவை பார்க்க சிறைக்கு வந்த சைலஜாவுக்கு அனுமதி மறுப்பு!


ஜெயலலிதாவின் சகோதரி என்று கூறிக்கொண்டு அவரை பார்க்க மத்திய சிறைச்சாலைக்கு வந்த சைலஜா என்ற பெண்மணிக்கு ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பூர்வீகம் மண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டையாகும். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்.
இந்நிலையில் சைலஜா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று கூறி பல வருடங்கள் முன்பே, கன்னட மீடியாக்களுக்கு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அந்த மீடியாக்களுக்கு ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பினார். இந் நிலையில் அந்த சைலஜா இன்று தனது மகள்
அம்ருத்தாவை அழைத்துக் கொண்டு ஜெயலலிதாவை பார்த்து நலம் விசாரிக்க பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு வந்திருந்தார்.
 ஆனால் சிறை அதிகாரிகள், அவரை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதா யாரையும் பார்க்க தயாராக இல்லை என்று கூறிவிட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு சைலஜா கிளம்பி சென்றார். முன்னதாக சைலஜா நிருபர்களிடம் கூறுகையில், “எனது அக்கா தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment