Friday, September 26, 2014

ஐசிஐசிஐ வங்கி ஏற்கனவே டோக்கன் எடுத்து லைன்ல நிக்காம பணத்தை ஏடிஎம்லே செலுத்தும் வசதியை கொண்டு வந்தது பெரிய ரிலீஃப் அது போக இரவு 8 மணி வரை இந்த வசதியை வச்சதாலே நிறைய பேரின் செக் பவுன்ஸ் ஆகாம மற்றும் நிம்மதியா ராத்திரி வந்து பணம் கட்டுறாங்க.

இப்ப இன்னொரு வசதியை கொண்டு வந்திருக்கு – வெறும் மொபைல் நம்பரை வச்சு யாருக்கு வேணுமானாலும் பணம் அனுப்பலாம் – அதே போல நீங்க பணம் அனுப்பும் ஆளுக்கு வங்கி கணக்கு ஐசிஐசியில் வேண்டாம் ஏன் எந்த ஒரு வங்கியிலும் வேண்டாம் – அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் – அதை வைத்து அவர் எந்த் ஒரு ஐசிஐசிஐ ஏ டி எம் மூலம் பணத்தை எடுக்க முடியும் -

அவருக்கு ஏ டி எம் கார்ட் கூட வேண்டாம். மற்ற வங்கிகளும் IMPS முறையில் இதை செயல்படுத்த / செயல்படுத்தியும் உள்ளது இதை பற்றி மேலும் அறிய மற்றும் பணத்தை அனுப்ப இங்கே கிளிக்கவும் - http://www.icicibank.com/Personal-Banking/insta-banking/internet-banking/cardless-cash-withdrawal.page?

0 comments:

Post a Comment