துபாய்: துபாய் அமீரகத்தில்(யுஏஇ) ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அங்கு தற்போது கட்டுமான பணிகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அது தொடர்பான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் உலகின் மிகப்பெரும் வர்த்தக கண்காட்சியான ‘எக்ஸ்போ2020 ‘ 2020ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனையோட்டி ஏராளமான புதிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் மட்டும் பல நிறுவனங்கள் மூலம் சுமார் 11 ஆயிரத்து 250(units) யுனிட்ஸ்களுகளை கொண்ட 42 புதிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.
இது தவிர மேலும் எதிர்காலத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மால் ஆப் தி வோர்ல்டு என்ற பெயரில் 25 பில்லியன் திர்ஹம் மதிப்பில் உலகின் மிகப்பெரிய அளவில் பூங்கா, செயற்கை அருவி,உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரம் அமைக்க அறிவிப்பு வெளியானது.

அதே போன்று பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ‘மெய்தான் அவென்யூ , ஸ்டெர்லிங், இண்டிகோ சென்ற உள்ள பல்வேறு கட்டுமான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.
உலகின் முண்ணனி நிறுவனங்கள் இப்பணிகளில் ஈடுபட உள்ளன. மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கட்டுமான தொழிலில் அதிகளவில் இந்தியர்களே பணியமர்த்தப்படுகின்றனர்.எனவே இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment