Saturday, September 27, 2014

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவதாக பெங்களுர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறை வளாகத்தில், பெங்களுரு சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

இதையடுத்து பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் வி.வி.ஐ.பி.க்கான செல்லில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவருக்கான செல் நம்பர் 23. கைதி எண் 7402. இந்த வி.வி.ஐ.பி. செல் பெண்கள் பிளாக் அருகில் உள்ளது. வி.வி.ஐ.பி. செல்லில் அடைக்கப்பட்ட முதல் நபர் ஜெயலலிதா.

இதே சிறையில் வி.ஜ.பி. செல்லில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, ஜனார்த்தன் ரெட்டி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.வி.ஐ.பி. செல்லில் ஜெயலலிதா இருக்கும் அறையில் கட்டில், மெத்தை, மின்விசிறி, தனி பாத்ரும் வசதி உள்ளது. தண்டனை கைதி என்பதால் ஜெயலலிதாவுக்கு வெள்ளை நிற சேலை வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை இரவு, ராகி உருண்டை, 200 கிராம் அரிசி சோறு, இரண்டு சப்பாத்தி, அதற்கான கூட்டு வகைகள், பழங்கள் கொடுக்கப்பட்டது. அவர் பழங்களை மட்டுமே சாப்பிட்டார்.

சசிகலா, இளவரசி ஆகியோர் பெண்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டனர். சாப்ட்வேர் இன்ஜினியர் கொலை வழக்கில் கைதாகியுள்ள சுபா என்ற பெண்ணுடன் இவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சுதாகரன் வி.ஐ.பி. செல்லில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment