உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வடிவமைப்பில் துபாயில் 2017 ல் ஓட்டல் திறக்க திட்டமிட்டுள்ளதாக இதனை உருவாக்க உள்ள தனியார் நிறுவனத்தின் இயக்குனர் அருண் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தாஜ் அரேபியா” என்ற பெயரில் 20 மாடிகளும் 350 அறைகளும் கொண்ட கண்ணாடிகளால் ஆன ஹோட்டல் உருவாக்க நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு இதற்கான துபாய் முனிசிபாலிடியின் அனுமதி கேட்டுள்ளோம்.
விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இவ்வருட கடைசியில் இதற்கான பணிகளை தொடங்கி 21016ல் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் எனவும், 2017ல் ஓட்டல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment