லக்னோ:அரசியல் ஆதாயத்துக்காகவே பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.
"இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காகவே வாழ்கின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். இது தொடர்பாக, மாயாவதி லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து மோடி பேசிவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அவரது கட்சியின் நடவடிக்கைக்கு இது பொருந்தவில்லை. இந்தக் கருத்தை மோடி அரசியல் ஆதாயத்துக்காகவே தெரிவித்துள்ளார்.
மதவாதத்தைப் பரப்புவதாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவற்றின் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அவர்களின் கொள்கைகள் வலுப்பெற்றுள்ளன.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக மோடி பேசிவரும் நிலையில், அவர் சார்ந்த கட்சியின் இளைஞர் அமைப்பினர் சமூகத்தில் வெறுப்பைச் தூண்டும் பேச்சுகளை பேசி வருகின்றனர் என்றார் மாயாவதி.

0 comments:
Post a Comment