Saturday, September 27, 2014

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. 

குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, பிற்பகல் 3 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில்

  
வி.களத்தூரில் - 

ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து வி.களத்தூரில்
பஸ்கள் நிறுத்தப்பட்டன.. நமதூர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் போடப்பட்டுள்ளது.
மேலும் நமதூரில் 3:00 மணி முதல் மின் தடை உள்ளதால் மக்கள் அவதி..


தமிழகம் -



ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கடைகளை
அடைக்கும்படி உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர்.
அரசு பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டன. காஞ்சிபுரத்தின் அருகே ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்தும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

புகைப்படங்கள் - 


0 comments:

Post a Comment