தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் நம்மை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இறைக்கட்டளையை நிறைவேற்றும் நன்னோக்கில் ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்து நிறைவேற்றுவது சன்மார்க்க கடைமை!
அந்த கடமையை நிறைவேற்றுவது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
அவைகளின்(பிராணிகளின்) இறைச்சிகளையோ,அவைகளின் இரத்தங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை,மாறாக அவர்களின் (பிராணிகளை குர்பானி கொடுப்போரின்) இறையச்சத்தை மட்டுமே பார்க்கின்றான் (அல்-குர்ஆன்)
இந்த இறைவசனத்தை நினைவூட்டுவதின் அவசியம் என்னவெனில்,இன்றைய நமது இளம் தலைமுறையினர் குர்பானி ஆடு,மாடுகளை அறுக்கும் சமயத்தில் போட்டோ,வீடியோ எடுத்து ரத்த வெள்ளத்தில் ஆடுகள் துடிப்பதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் உலாவிடச் செய்கின்றனர்.
இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டியது சமூக பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமையுமாகும். சாதரணமாகவே இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாத போக்குடையவர்கள் என்ற நச்சுக்கருத்தை மீடியாக்கள் வளர்த்து விட்ட நிலையில் இதுபோன்ற செயல்கள் நம்மால் வலையுகத்தில் பரப்ப படும்போது மேலும் எதிர்மறையான எண்ணம் ஏற்பட வழிவகுக்கும்..
எனவே ஹஜ்ஜுப் பெரு நாளன்று குர்பானி நிகழ்வுகளை படம் பிடிப்பதை தடுப்போம்..அவைகள் பரப்ப படுவதை தவிர்ப்போம்!

0 comments:
Post a Comment