Saturday, November 29, 2014

பெரும்பாலானோர் நம் போன் சட்டை பையில் வைத்திருக்கும் போது, அல்லது வாகனங்களை ஓட்டும் போதோ போனை கையில் எடுக்காமல் கையுறையில் உள்ள எலக்ட்ரானிக் பட்டன்கள் மூலம் போனை இயக்கி புளுடூத் வசதியை பயன்படுத்தி ஹியர் போனை காதில் பொருத்தி எதிர்முனையில் உள்ளவரோடு போனில் பேச முடியும்.

இந்த கையுறை மூலம் போன் கேமராவை இயக்குவது, சத்தத்தை கூட்டுவது குறைப்பது என போனின் அனைத்து செயல்பாடுகளையும் இதன் மூலம் இயக்க முடியும்.

இந்த தொழில்நுட்பம் மூலம் வாகனம் ஓட்டும் போது அவசர ,அவசரமாக போனில் கையில் எடுப்பதை. போனை தேடி தேடி எடுப்பது போன்ற சிரமங்களையும் விபரீதங்களையும் தவிர்க்க முடியும் என இதன் தயாரிப்பு நிறுவனர்களில் ஒருவரான பாஸ்டன் டெக்கீஸ் பென் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில் நுட்பம் வருங்காலங்களில் பல்வேறு எல்க்ட்ரானிக் பொருள்களை இயக்குவதற்கும் பயன்படும் எனவும் சில்லரை சந்தைக்கு ஏற்ற வகையிலான விலையில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment